அந்த கால நினைவுகள்

Received on email,Liked & Copied for my reference.

  • ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் .
  • ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான்
  • செல்போன்ல பட்டன் பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
  • மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாம தான்…!
  • கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளா தான் இருக்கும்.
  • மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
  • வெட்டிப் போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
  • தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்ம தான் .
  • கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாத்தான் இருக்கும்.
  • காதல் கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப் பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
  • நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
  • 10th 12th ரிசல்ட்  பேப்பர்ல பார்த்த கடைசி தலைமுறை நாம தான்
  • கதவு வச்ச டிவி ய பாத்த கடைசி தலைமுறை நாம தான்
  • ஆடியோ கேசட்டில் பாட்டு கேட்டதும் நம்ம தான்.
  • சைக்கிளில் கால் எட்டாத போதும் குரங்கு பெடல் ஓட்டியது நம்ம தலைமுறை தான்.
  • போஸ்ட் கார்டு ல ரிசல்ட் வந்த தலைமுறை நாம தான்
  • நாம் படித்த புத்தகத்தை விற்று அதில் வரும் பணத்தை அடுத்த வகுப்புக்கும் புத்தகங்கள் வாங்கினது,
  • நொண்டி, கிட்டிப்புள், பம்பரம், கண்ணாம்பூச்சி, கோலி cfc பலவிதமான விளையாட்டுகளுக்கு கடைசி தலைமுறை நாம்தான்…
  • 5,10,20,25 பைசா நாணயங்களை கடைசியா பாத்த தலைமுறையும் நாமதான்,
  • மண் குழப்பி வீடு கட்டி விளையாடிய கடைசி தலைமுறை நாம தான்
​உண்மைதானே ? நினைத்தாலே  பசுமை  இனிமை  எளிமை அல்லவா ?